(013) அமேசான் மழைக்காடுகளை பற்றிய பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்!!
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! வருடமெல்லாம் கொட்டும் மழை! மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்! இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்! ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். இந்த காடுகள் ஆபத்தானவை. உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க.. டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்! இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது! இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான். இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்! இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்