(008) மலேசியா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


 ஆங்கிலேய அரசிடம் இருந்து மலேசியா 1957 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

வடக்கே தாய்லாந்து நாட்டையும் தெற்கே சிங்கப்பூர் நாட்டையும் மலேசியா கொண்டு உள்ளது.

மக்கள் தொகை :

மலேசியாவில் மொத்தம் 31 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி சதவீதம் பேர் மட்டுமே மலேசிய பூர்வகுடிமக்கள் ஆவர். மீதமுள்ள அனைவரும் இந்தியா, சீனா மற்றும் மற்ற வேறு சில நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு குடியேறியவர்கள் ஆவார்கள்.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!

அங்கமாக இருந்த சிங்கப்பூர் :

1965ஆம் ஆண்டு வரை இன்றைய சிங்கப்பூர் நாடும் மலேசியாவின் ஒரு அங்கமாகவே இருந்தது. அதற்குப் பிறகு தான் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடாக உருவாகியது.

அபசகுனமான எண் :

மலேசியாவில் சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சீனக் கலாச்சாரத்தின் படி '4' என்ற எண் அபசகுனமான எண்ணாக பார்க்கப்படுகிறது.இன்னும் சொல்லவேண்டுமென்றால் இந்த எண் சாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் மலேசியாவின் சில கட்டிடங்களில் நான்காவது மாடியை பார்க்கவே முடியாது. '4' க்கு பதிலாக அவர்கள் '3A' என்பதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!

மிகவும் வாசனைமிக்க பழம்:

உலகிலேயே மிகவும் வாசனை கொண்ட பழமான துரியன் என்ற பழம் மலேசியாவில் தான் அதிக அளவில் வளர்கிறது. இந்த துரியன் பழத்திற்கு பல வகைகள் உள்ளன. 100 மீட்டர்களை கடந்தும் இந்த பழத்தின் வாசம் வீசும்.

பல கலாச்சாரங்களின் ஒன்றியம்:

மலேசியா ஒரு அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய நாடாகும். 67 சதவீத மலேசியர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர். இருப்பினும் மதத்தை பின்பற்றுவதற்கான முழு சுதந்திரம் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் மலேசியவில் உள்ளது. பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மலேசியாவில் பின்பற்றப்படுகின்றன. பல இனங்களை சேர்ந்தவர்களும், பல மதங்களை பின்பற்றுபவர்களும் மலேசியாவில் ஒன்றாக வாழ்கிறார்கள்.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க.. டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

இதை படிங்க லாஹ் :

மலேசியர்கள் பேசும் போது அடிக்கடி 'லாஹ்' (lah) என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். 'லாஹ்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் எதுவும் கிடையாது என்றே சொல்லப்படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இந்த வார்த்தை மிகவும் பிரபலமாக இந்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. மலாய் பேசுபவர்கள், சீனம் பேசுபவர்கள், தமிழ் பேசுபவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள் என அனைவருமே இந்த 'லாஹ்' என்ற வார்த்தையை இணைத்துப் பேசுகிறார்கள். உதாரணமாக தமிழில் ஒருவர் "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்பதற்கு பதிலாக "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் லாஹ்" என்றே கேட்பார்.

கர்ப்பிணிகளுக்கான பாரம்பரிய நம்பிக்கை :

மலேசியாவில் பாரம்பரியப்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் பூச்சியையோ அல்லது வேறு எந்த ஒரு  உயிர்களையோ கொள்ளுதல் அல்லது துன்புறுத்துதல் கூடாது. அப்படி செய்தால் பிறக்கும்  குழந்தை ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் பிறக்கும் என்ற ஒரு நம்பிக்கை அங்கே உள்ளது.

பொது அறிவு செய்திகள் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள்!

மூன்றாவது பெரிய தீவு :

உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய தீவு போர்னியோ. இந்த பிரம்மாண்ட  தீவு புரூனே, மலேசியா, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளால் பகிரப்பட்டுள்ளது.

முதல் பெயர் :

கி.பி 150 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட 'Ptolemy’s book Geographia' என்ற புத்தகத்தில் இன்றைய மலேசியா 'Aurea Chersonesus' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர்தான் மலேசியாவிற்கு சூட்டப்பட்ட முதல் பெயர் என்று அறியப்படுகிறது.

இராஜ குடும்பங்கள் :

மலேசியாவில் மொத்தம் 9 இராஜ குடும்பங்கள் உள்ளன. இந்த 9 ராஜ குடும்பங்களும் சேர்ந்து  வாக்களித்து ஒருவரை 5 ஆண்டுகள் காலகட்டத்திற்கு மன்னராக தேர்ந்தெடுப்பார்கள். 

உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள்!

மிகப்பெரிய முருகர் சிலை :

மலேசியாவின் பாத்து குகைகளில் சுமார் 140 அடிகள் உயரமுள்ள மிகப்பெரிய தங்க முலாம் பூசப்பட்ட முருகப் பெருமானின் சிலை உள்ளது. இந்த முருகரின் சிலையை அமைக்கும் பணி 2004 ஆம் ஆண்டு 15 சிற்பிகளால் தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளின் போது திறந்து வைக்கப்பட்டது.

விமர்சையாக கொண்டாடப்படும் தைப்பூசம் :

மலேசியாவில் வாழும் தமிழ் மக்களில் முருகபெருமானின் பக்தர்கள் ஏராளம் உள்ளனர். தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் கோலாகலமாகவும், விமர்சையாகவும் தமிழ் மக்களால் மலேசியாவில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற  நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் முருகப்பெருமானுக்கு பயபக்தியோடு செலுத்தப்படுகின்றன.

Thanks with Source: tamilinfohub.online

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

(006) ஆப்பிரிக்கா பற்றிய அரிய தகவல்கள்

(002)உலகிலேயே மிகப்பெரியவைகளை அறியுங்கள்

(007) மூளை பற்றிய முக்கிய தகவல்கள்