(006) ஆப்பிரிக்கா பற்றிய அரிய தகவல்கள்

நிலப்பரப்பு :

ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பு 30,293,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.

பெரிய நாடு :

சூடான் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும். இந்த நாடு  2,504,530 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை கொண்டுள்ளது.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க.. டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

சிறிய நாடு :

ஆபிரிக்கக் கண்டத்திலேயே மிகச்சிறிய நாடு சீசெல்சு என்ற தீவு நாடாகும். இந்நாட்டின் நிலப்பரப்பு 453 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமேயாகும்.

மக்கள் தொகையில் 2ஆம் இடம்!

உலக மக்கள் தொகையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 16% மக்கள் தொகை ஆப்பிரிக்காவில் தான் உள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து,காங்கோ ஜனநாயக குடியரசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதன்மையான 5 நாடுகள் ஆகும். 

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!

2020 ஆண்டின் படி சராசரியாக நைஜீரியா நாட்டில் 206,139,589 மக்களும், எத்தியோப்பியாவில் 114,963,588 மக்களும்,எகிப்தில் 102,334,404 மக்களும்,காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் 89,561,403 மக்களும்,தென் ஆப்பிரிக்காவில் 59,308,690 வாழ்வதாக கூறப்படுகிறது.

ஏழ்மையான கண்டம் :

ஆப்பிரிக்கா உலகின் பல ஏழ்மையான நாடுகளைக் கொண்ட கண்டமாகும். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மாலாவி, புருண்டி,நைஜர்,சிம்பாவே,மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு,லைபீரியா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகவும் ஏழ்மையான நாடுகளாக உள்ளன.

வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!

சகாரா பாலைவனம் :

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சகாரா பாலைவனம் ஆப்பிரிக்காவில் உள்ளது. இந்த பாலைவனத்தின் மொத்த பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

பழங்குடி மக்கள் :

ஆப்பிரிக்காவில் 3000க்கும் மேற்பட்ட பழங்குடி  இனங்கள் உள்ளன. இந்தப் பழங்குடி இனங்களை சேர்ந்த மக்கள் இன்றைக்கும் அவர்களது விச்சித்திரமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகிறார்கள்.

பொது அறிவு செய்திகள் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள்!

கிளிமஞ்சாரோ :

தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை தான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மலையாகும். இந்தப் பெயரை நீங்கள் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா? ஆம்! நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ஒரு பாடலில் 'கிளிமஞ்சாரோ' என்ற இந்த மலையின் பெயரை கேட்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி அந்தப் பாடலின் காட்சிகளும் கிளிமஞ்சாரோ மலையில் வைத்து தான் எடுக்கப்பட்டது.

பல மொழிகள் :

ஆப்பிரிக்காவில் மொத்தம் சுமார் 2,000 மொழிகள் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பான்மையாக பேசப்படும் மொழியாக அரபு மொழி உள்ளது.

உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள்!

மனித இனம் தோன்றிய இடம்?!

மனித இனம் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே உலகம் முழுக்க புலம்பெயர்ந்து பரவியதாக ஆய்வாளர்கள் வியூகிக்கிறார்கள்.

நீளமான நதி :

உலகின் மிக நீளமான நதியான நைல் நதி ஆப்பிரிக்காவில் ஓடுகிறது. சுடான்,எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் வழியாக சுமார் 4,150 மைல்கள் வரை இந்த நதி ஓடுகிறது.

நெல்சன் மண்டேலா :

ஆப்பிரிக்கா என்று சொன்னவுடனேயே நெல்சன் மண்டேலா என்ற மாபெரும்  தலைவரின் பெயர் பலருக்கு நினைவில் வரும். கருப்பு இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான நிறவெறிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி 27 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர் மண்டேலா. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் நடத்தப்பட்ட மக்களாட்சி முறையிலான தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தை சேர்ந்த அதிபராக பதவி ஏற்றார். உலக அளவில் அகிம்சையின் அடையாளமாக மகாத்மா காந்தி பார்க்கப்படுவது போலவே நெல்சன் மண்டேலாவும் அகிம்சை வழியில் ஒடுக்கப்பட்ட ஓர் இனத்திற்காக தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போராடி வெற்றிபெற்ற தலைவராகவே இந்த உலகம் இன்றைக்கும் அவரது புகழை போற்றுகிறது.

Thanks with Source: tamilinfohub.online


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

(002)உலகிலேயே மிகப்பெரியவைகளை அறியுங்கள்

(007) மூளை பற்றிய முக்கிய தகவல்கள்