(005) மனித உடலுறுப்புகளைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
மனிதனின் கண்களின் அளவு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. ஆனால் மனிதனின் மூக்கு மற்றும் காதுகளின் வளர்ச்சிக்கு ஒரு போதும் வாழ்நாளில் முடிவே கிடையாது.
ஒரு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75 தடவைகள் துடிக்கும். 70 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ்ந்தால் அவனது இதயம் 2.5 பில்லியன் தடவைகள் மொத்தமாக வாழ்நாள் முழுக்க துடிக்கும்.
உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!
காதின் மத்திய பகுதியில் உள்ள Stapes என்ற எலும்பு தான் மனித உடலின் மிகவும் சிறிய எலும்பாகும். இந்த எலும்பின் நீளம் 2.8 மில்லிமீட்டர்கள் மட்டுமேயாகும். இதேபோல தாடை எலும்பு தான் மனித உடலில் உள்ள மிகவும் கடினமான எலும்பாகும்.
ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 20 தடவைகள் வரை மனிதர்கள் கண்களை சிமிட்டுகிறார்கள்.ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் தடவைகள் வரை மனிதர்கள் கண்களை சிமிட்டுகிறார்கள்.
மனித மூளையால் பத்து நிமிடங்கள் வரை ஆக்ஸிஜன் வாயு இல்லாமல் தாக்குபிடிக்க முடியும்.
ஒரு மனித உடலில் சராசரியாக நான்கு பவுண்டுகள் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.அச்சப்படாதீர்கள்,இவற்றில் பெரும்பான்மையான பேக்டீரியாக்கள் மனிதனுக்கு எந்த விதமான அச்சுறுத்தலையும் தராதவையே ஆகும்.
வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!
ஒரு மனிதன் சராசரியாக தனது வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவிற்கு உமிழ்நீரை உற்பத்தி செய்கிறான்.
சராசரியாக ஒரு மனிதன் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 33 டன்கள் வரை உணவை உண்கிறான். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 6 யானைகளின் எடைக்கு ஈடான அளவிற்கு தனது வாழ்நாளில் மனிதன் உணவை உண்கிறான் என்ற சுவாரஸ்யமான உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு நீங்கள் 12 மணி நேரங்களை நடப்பதற்காக மட்டும் செலவு செய்தால் 690 நாட்களில் ஒட்டுமொத்த உலகத்தையும் உங்களால் சுற்றி வர முடியும்.
மனித கண்களோடு கேமராக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மனித கண்கள் சுமார் 576 மெகாபிக்சல் கொண்டவை ஆகும்.
ஆண்களின் தாடியில் உள்ள முடி தான் உடலிலேயே மிகவும் வேகமாக வளரும் முடி ஆகும்.ஒரு ஆண் தனது வாழ்நாளில் தாடியை வெட்டாமலேயே இருந்தால்,அவரது தாடி சுமார் 30 அடிகள் வரை வளரும் தன்மை கொண்டது.
பொது அறிவு செய்திகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
குழந்தை பிறக்கும்போது 300 எலும்புகளுடன் பிறக்கும்.ஆனால் நாளடைவில் வளர்ச்சி அடையும்போது அந்த 300 எலும்புகள் 206 எலும்புகள் ஆக குறைந்து விடும்.
உங்கள் கண்களை மூடிக்கொண்டு ஒருபோதும் உங்களால் தும்மளிட முடியாது.
மாலை நேரத்தில் ஒரு மனிதனின் உயரத்தை விட காலை எழுந்தவுடன் அவனது உயரம் 8 மில்லிமீட்டர்கள் அதிகமானதாக இருக்கும்.
மனிதர்கள் இரவில் காணும் கனவுக்காட்சிகளில் 90% கனவுக்காட்சிகளை பகலில் கண்விழிக்கும் போது மறந்து விடுவார்கள்.
மனித மூளையில் 80% க்கும் மேற்பட்ட பகுதி நீரால் ஆனது.
உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
18 வயது வரை தான் மனிதனின் மூளை வளர்ச்சி அடையும்.அதன் பிறகு மூளையின் நின்றுவிடும்.
விரல் ரேகைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமாக தனித்துவம் வாய்ந்ததாகவும் இருப்பதை போலவே நாக்கின் ரேகைகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமாகவே இருக்கும்.
மனிதனின் எலும்புகள் இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது ஆகும்.
மனித உடல் பற்றிய வேடிக்கையான உண்மைகள்:
உங்கள் உடலில் இருந்து தினமும் வெளியேறும் துர்நாற்ற வாயுவால் (Fart) ஒரு பலூனையே உங்களால் தினந்தோரும் நிரப்ப முடியும் என்பது ஒரு வேடிக்கையான உண்மையாகும்.
சராசரியாக ஒரு மனிதன் தனது முழு வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கழிவறையில் உட்கார்ந்து இருப்பதிலேயே செலவு செய்கிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக