(004) பொது அறிவு வினா விடைகள் - பகுதி 1
1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம்
2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி
3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா
5. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
6. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு
7. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
8. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? நீலாம்பரி
9. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது? சிரபுஞ்சி, இந்தியா.
10. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து
உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்!
11. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்
12. ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள்
13. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா
14. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? குஜராத்
15. சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்? ராஜிவ் காந்தி
வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!
16. இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம்
17. உலகின் மிகச் சிறிய பறவை எது? ஹம்மிங் பறவை
18. கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? லண்டன்
19. கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது? சோடியம் குளோரைடு
20. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது? கார்டியாக் தசை
21. கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது? ஓக் மரம்
22. ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன? நாலாயிர திவ்ய பிரபந்தம்
23. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது? சவுதி அரேபியா
24. உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது? வாஸா
25. பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்? பரோக்கள்
26. இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்? ராபர்ட் க்ளைவ்
27. 'செவாலியர்' என்ற விருதை வழங்கும் நாடு எது? பிரான்ஸ்
29. உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? சவூத அரபியா
30. புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? அமர்நாத்
பொது அறிவு செய்திகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
31. மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? மனிதக் குரங்கு
32. தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? லேண்ட்ஸ்டார்ம்
33. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
34. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபாய் பட்டேல்
35. வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
36. தந்தியை கண்டுபிடித்தவர் யார்? மார்க்கோனி
37. தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்? தாமஸ் செயிண்ட்
38. ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்? ஜெர்மன் உழைப்பாளர் கட்சி
39. திருப்புகழை இயற்றியவர் யார்? அருணகிரிநாதர்
40. மாவீரன் நெப்போலியன் எங்கு பிறந்தார்? கார்சிகா தீவு
உடல் நலம் / இயற்கை மருத்த்வம் துணுக்குகள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்!
41. எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? 76 பிரமிடுகள்
42. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார்
43. பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது? அடிப்பகுதி
44. பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? கல்கி
45. உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது? மலேசியா
45. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்
46. செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு? ஸ்விட்சர்லாந்து
47. பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது? வேத வியாசர்
48. தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன? இரண்டு
49. எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது? 1976
50. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
Thanks with Source: tamilinfohub.online
கருத்துகள்
கருத்துரையிடுக